ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதில் திடீர் சிக்கல்

ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதில் திடீர் சிக்கல்

ஐரோபிய நாடுகளில் இருந்து பிரிட்டன் விலகுவது குறித்த கருத்துக்கணிப்பு கடந்த ஆண்டு நடந்தபோது அதற்கு 55% மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து விலகுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன் பிரதமர் கேமரூன் பதவி  விலகினார். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து விலகும் நடவடிக்கையை பிரிட்டன் எடுத்து கொண்டிருந்த நிலையில் இதற்கு முட்டுக்கட்டையாக பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த வழக்கு ஒன்றில் தீர்ப்பு அளித்த பிரிட்டன் நீதிமன்ற  நீதிபதி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது குறித்து பாராளுமன்றத்தில் முதலில் சட்டம் பிறப்பித்து தீர்மானம் நிறைவேற்றுங்கள். அதுவரை விலகுவதற்கான பணிகளை தொடங்கக் கூடாது என உத்தரவிட்டார். இதனால் அரசின் நடவடிக்கையில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.

Leave a Reply