நிர்மலா சீதாராமனை சந்திக்க இங்கிலாந்து அமைச்சர் மறுத்தாரா?
இந்திய ராணுவ அமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க பிரிட்டன் அமைச்சர் கவீன் வில்லியம்சன் என்பவர் மறுத்து விட்டதாக செய்திகள் பரவி வருகிறாது.
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிம்காம் ஷியர் என்ற நகரத்தில் கடந்த 18 முதல் 22ஆம் தேதி வரை பிரிட்டன்-இந்தியா வாரம் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் பிரிட்டன் அமைச்சர்கள், இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா, நிடி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கலந்து கொண்டனர்.
இதில் இந்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நிர்மலா சீதாராமன் இந்த பயணத்தை திடீரென ரத்து செய்தார். இதற்கு காரணம் லண்டன் அமைச்சர் கவீன் வில்லியம்சன் அவரை சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார்.