பிரிட்டன் பாராளுமன்றம் திடீரென மூடப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்
உலகில் உள்ள மற்ற நாடுகளை போலவே பிரிட்டனும் அவ்வப்போது தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக கடந்த 2005ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 52 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலின் 11-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சந்தேகத்திற்கு சிறிய பார்சல் வந்தது. இதனால் பிரிட்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சந்தேகத்திற்கு இடமான சிறிய பார்சல் ஒன்று வந்துள்ளது. அந்த பார்சலை பரிசோதனை செய்த போது அதில் வெள்ளை பவுடர் இருந்ததாகவும், இந்த வெள்ளை பவுடர் மரணத்தை விளைவிக்க கூடியதா அல்லது ஆபத்தான வைரஸா என்பது பற்றி போலீசார் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை அடுத்து பாராளுமன்றம் உடனடியாக மூடப்பட்டது. பார்சலில் வந்த பவுடர் குறித்த பரிசோதனை முடிந்த பிறஏ பாராளுமன்றம் மீண்டும் திறக்கப்படும் என தெரிகிறது.