ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக நஷ்ட ஈடு தருகிறது இங்கிலாந்து
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக இங்கிலாந்து நாடு முடிவு செய்தது. இதற்கு அந்நாட்டு மக்களும் பொது வாக்கெடுப்பு மூலம் விருப்பம் தெரிவித்தனர். இதனையடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கடந்த ஆண்டு அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கான காலகெடு முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே, அது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவதால் பல லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதாகவும் அதனை ஈடுகட்ட இங்கிலாந்து ரூ.8 லட்சம் கோடி 118 பில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
ஆனால் அவ்வளவு பெரிய தொகையை தர முடியாது என இங்கிலாந்து மறுத்து வந்த நிலையில் முடிவு எட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக ரூ.3 லட்சம் கோடி நஷ்டஈடு தர தயார் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. அதை 3 தவணையாக வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளது. இத்தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.