2 டாலர் மட்டுமே செலவு செய்து 850 டாலர் மதிப்புள்ள ஐபோனை வென்ற வாலிபர்

2 டாலர் மட்டுமே செலவு செய்து 850 டாலர் மதிப்புள்ள ஐபோனை வென்ற வாலிபர்

iphoneஉக்ரைன் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெறும் 2 டாலர் மட்டுமே செலவு செய்து 850 டாலர் மதிப்புள்ள ஐபோனை வென்றுள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஐபோனை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த ஆப்பிள் நிறுவனம் பல்வேறு புதுமையான விளம்பரங்களை செய்து வருகிறது. இந்நிலையில் ஐபோன் விற்பனையகம் ஒன்று, தனது பெயரை ஐ போன் 7 என அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொள்ளும் முதல் ஐந்து நபர்களுக்கு ஐபோன் 7 போனை பரிசாக கொடுப்பதாக அறிவித்தது.

இந்த அறிவிப்பை சவாலாக ஏற்றுக்கொண்ட உக்ரை நாட்டை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய பெயரை வெறும் 2 டாலர் மட்டுமே செலவு செய்து ‘ஐபோன் செவன்’ என்று மாற்றி ஐபோன் 7ஐ பரிசாக பெற்றுள்ளார். ஒருசில ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது பழைய பெயரை இவர் மாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply