[carousel ids=”37683,37684,37685,37686,37687,37688,37689,37690,37691,37692,37693,37694,37695,37696,37697,37698,37699,37700,37701,37702,37703,37704″]
மலேசிய விமானம் MH17 ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டு அதில் பயணம் செய்த 295 பயணிகள் மரணம் அடைந்த விவகாரம் உலக நாடுகளை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் கோபப்பார்வை முழுவதும் ரஷ்ய அதிபர் புதின் மீது பதிந்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் அரசு இன்று காலை விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு அளித்தது. இந்த விபத்தில் பலியான 80 குழந்தைகளின் புகைப்படங்கள் கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அளவுக்கு மிகவும் உக்கிரமாக இருப்பதாகவும், இந்த குழந்தைகளின் மரணத்திற்கு புதின் பதில் சொல்லியே ஆகவேண்டும் என உக்ரைன் அதிபர் பெட்ரோ போர்சென்கோ கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த புதின், இந்த துயர சம்பவத்திற்கு உக்ரைன் அதிபர் கிளர்ச்சியாளர்களிடம் சமரசம் செய்யாததே காரணம் என்றும், ரஷ்யாவுக்கும் இந்த தாக்குதலுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு புதின் கொடுத்த சக்தி வாய்ந்த ஏவுகணைகளும், ஆயுதங்களுமே இந்த துயரச்சம்பவத்திற்கு காரணம் என்றும், ரஷ்யா மீது உலக நாடுகள் ஒன்று சேர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.