உள் அலங்காரம்: மயில் போல வண்ணமயமான வீடு!

[carousel ids=”71956,71957,71958,71959″]

மழைக் காலம் நெருங்குகிறது. அந்தக் காலத்துக்குப் பொருந் தும் வண்ணங்களில் வீட்டை அலங்கரிக்க நினைப்பவர்கள் மயிலின் வண்ணங்களைத் தேர்ந்தெடுக் கலாம். மழையும், மயிலும் நண்பர்கள் என்பதால் இந்த வண்ணங்கள் மழைக் காலத்தில் உங்கள் வீட்டுக்குப் புத்துணர்ச் சியைக் கொடுக்கும். இந்த மயிலின் வண்ணங்களை வீட்டுக்குள் எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

மயில் கழுத்து நீலம்

இந்த நீலத்தை வீட்டின் சுவருக்குப் பயன்படுத்த நினைப்பவர்கள் மயிலின் மற்ற வண்ணங்களை மற்ற பொருட்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன், மயில் கழுத்து நீலம் என்றால் அது அடர்த்தியான நீலமாக இருக்கும் என நம்மில் பலரும் நினைப்போம். ஆனால், அது சற்று சாம்பல் நிறம் கலந்த நீலமாகவே சுவரில் வெளிப்படும். மயிலின் மற்ற நிறங்களான பச்சை, மஞ்சள், தங்கம் போன்ற நிறங்களில் அறைக்கலன்கள், தரைவிரிப்புகள், விளக்குகள், ஓவியங்கள் இருக்குமாறு வீட்டை வடிமைக்கலாம். இது வீட்டுக்கு ஒரு முழுமையான வண்ணங்களின் கலவையைக் கொடுக்கும்.

மயில் பச்சை

மயில் பச்சையை உங்கள் வீட்டின் பிரதான நிறமாகத் தேர்ந்தெடுக்கும் போது, அதனுடன் தங்க நிறத்தை இணைத்துக்கொள்ளலாம். மயில் பச்சையில் அறைக்கலன்களைத் தேர்ந்தெடுத்தால், சுவருக்குப் பொன்னிற மஞ்சளைத் தேர்ந்தெடுக்கலாம். மயில் கழுத்து நீலத்தைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பில்லையென்றாலும் அது பெரிய குறையாகத் தெரியாது. ஒருவேளை, மயில்கழுத்து நீலத்தைப் பயன்படுத்த விரும்பினால், ஏதாவது ஒன்றிரண்டு பொருட்களில் மட்டும் இருக்குமாறு பயன்படுத்தலாம்.

வண்ணங்களில் சமநிலை

பச்சை, நீலம் போன்ற நிறங்கள் மட்டுமல்லாமல் பசுநீலம், கருநீலம், ஊதா, பொன்னிறம் என மயில் வண்ணங்களின் கலவையைச் சமமாகவும் பயன்படுத்தலாம். சுவருக்கு அடர்த்தியான நீலத்தைத் தேர்ந்தெடுக்காமல் மிதமான நீலத்தைத் தேர்ந்தெடுத்தால், அதே மாதிரி மிதமான வண்ணங்களை மற்ற பொருட்களிலும் பயன்படுத்த வேண்டும்.

சாப்பாட்டு மேசை

சாப்பாட்டு மேசைப் பகுதிகளில் மயில் வண்ணங்களைப் பயன்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. தரைவிரிப்பில் ஆரம்பித்து தட்டுகள் வரை மயில் வண்ணங்களில் உங்களால் அலங்கரிக்க முடியும்.

மயிலின் வண்ணங்களை மட்டுமல்லாமல் மயிலின் நவீன ஓவியங்கள், சிற்பங்களை வைத்தும் வீட்டை அலங்கரிக்கலாம்.

Leave a Reply