70 ஆயிரம் கோடி செலவில் நாசா செலுத்திய செயற்கைக்கோள்
அமெரிக்காவில் உள்ள நாசா வானிலை நிலவரங்களை மிகத்துல்லியமாக அறிய GOES-S என்ற அதிநவீன செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.
GOES S செயற்கைகோள் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் கேப் கேனவரலில் உள்ள தளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது. இதனால் இனிமேல்ல் வானிலை நிலவரங்களை முன்கூட்டியே துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். இந்த செயற்கைக்கோள் தயாரித்து விண்ணில் செலுத்த இந்திய மதிப்பின்படி சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
அமெரிக்காவின் மேற்குப் பிராந்தியத்தில் ஏற்படும் புயல், காட்டுத் தீ, வெள்ளம், மண் சரிவு போன்ற இயற்கை பேரிடர்களை துல்லியமாக அறிவதற்கு இந்த செயற்கை கோள் உதவும். இதுகுறித்து நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் வானிலை தொழில்நுட்பத்தில் இது முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
After today's launch of @NOAASatellites' #GOESS, it will be positioned in a geostationary orbit in ~2 weeks. From there, it'll provide advanced imagery & atmospheric measurements, a real-time look at lightning & improved monitoring of space weather. Info: https://t.co/P8g4hyTjqJ pic.twitter.com/zGPzvgMWQq
— NASA (@NASA) March 2, 2018