உலக நன்மை வேண்டி குபேர மகாலட்சுமி மகா யாக பெருவிழா!

LRG_20151016165245510638விருத்தாசலத்தில் உலக நன்மை வேண்டி, குபேர மகாலட்சுமி மகா யாகப் பெருவிழா நடந்தது. நவராத்திரியை முன்னிட்டு, விருத்தாசலம் வடகோட்டை வீதி நாட்டுக்கோட்டை நகரத்தார் மண்டபத்தில், குபேர மகாலட்சுமி மகா யாக பெருவிழா நேற்று மாலை 5:30 மணிக்கு துவங்கியது. அனுக்ஞை, மகா கணபதி பூஜை, தீபாராதனை நடந்தது. காலை 7:00 மணியளவில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி சுவாமிகளுக்கு மகா சண்டிஹோமம் நடந்தது. அதில், சகல கஷ்டங்கள் நீங்கவும், தொழில் முன்னேற்றம் பெறவும், நவக்கிரக தோஷங்கள் நீங்கவும், உலக நன்மை வேண்டியும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, வசோத்தாரை, சவுபாக்கிய த்ரவ்ய ஹோமம், மகா பூர்ணாகுதி, தீபராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, குபேர மகாலட்சுமி யாக விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply