உலகம்முழுவதும் உள்ள சுற்றுலா வாசிகள் விரும்பிச் செல்லும் சுற்றுலா தளங்களில், கம்போடியாவில் உள்ள ஆங்கோர் இந்து கோயில்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.
உலக அளவில் சுற்றுலாவாசிகள் அதிகம் செல்லும் சுற்றுலா தளங்களை அமெரிக்காவில் உள்ள லோன்லி பிளேனட் என்ற அமைப்பு வரிசைப்படுத்தி உள்ளது. இதில் கம்போடியாவில் “பூமியில் உள்ள இந்து சொர்க்கம்” என அழைக்கப்படும் ஆ.ங்கோர் இந்து கோயில்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வடக்கு கம்போடியாவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள், கருவறைகள், கோபுரங்கள் இந்த உச்சத்தைப் பெற்றுத் தந்துள்ளன. உலகின் மிகப்பெரிய விஷ்ணு கோயில் இங்கு உள்ளது. பர்மா, .லாவோஸ் மற்றம் தெற்கு சீனாவிலும் இந்து சாம்ராஜ்ஜியம் பரவி இருந்தது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. ஆங்கோரில் உள்ள இந்த கோயில்களின் தூண்களிலும், தரையிலிருந்து கூரை வரையும், ராமாயணம், மகாபாரத காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.
ஆங்கோர் இந்து கோயில்களை அடுத்து, ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய பவளப் பாறைகள் இரண்டாம் இடத்தையும், பெரு நாட்டில் உள்ள பழமையான கூரான மலைச் சிகரம் மூன்றாவது இடத்தையும், சீனப் பெருஞ்சுவர் நான்காம் இடத்தையும், இந்தியாவின் தாஜ்மகால் ஐந்தாம் இடத்தையும், அமெரிக்கா அரிசோனா மாகாணத்தில் உள்ள உலகப் பாரம்பரிய தேசிய பூங்கா ஆறாம் இடத்தையும், இத்தாலியில் உள்ள பழமையான விளையாட்டரங்கம் ஏழாம் இடத்தையும், பிரேசில்- அர்ஜென்டினா எல்லையில் உள்ள இகுவாஜு நீர்வீழ்ச்சி எட்டாம் இடத்தையும், ஸ்பெயினில் உள்ள ஆலம்பரா கோட்டை மாளிகை ஒன்பதாம் இடத்தையும், துருக்கியில் உள்ள ஆயா ஷோபியா என்ற அருங்காட்சியகம் ( இது முதலில் தேவாலயமாக இருந்து, பின்னர் மசூதியாக மாற்றப்பட்டு, தற்போது அருங்காட்சியகமாக உள்ளது) பத்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.