“யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய கணியன் பூங்குன்றனார் உலகத்தையே தன் உறவினராக கருதிப் பாடியுள்ளார். “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று எல்லோருக்கும் கடவுளின் அருள் கிடைக்க விரும்புகிறார் திருமூலர். நல்ல மனம் கொண்ட அனைவரும், உலக நலனுக்காகவே வாழ்வையே அர்ப்பணிக்கத் தயாராக இருப்பர்