உலகிலேயே அதிக ஆஸ்தி கொண்ட கடவுள்

10439472_956795394336659_95537176802202059_n

உலகில் இருக்கும் அனைத்து கடவுள்களையும் விட மிக அதிகமான சொத்தும், தங்க நகைகளையும் வைத்திருப்பவர் நமது திருப்பதி வெங்கடாஜலபதிதான். இவரின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடியை கடந்து விட்டது. தேசம் முழுவதும் பல இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் மதிப்பு இது.

இதுபோக தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் திருப்பதி வந்து போகிறார்கள். அவர்கள் தரும் காணிக்கை மட்டும் தினமும் 2.35 கோடி சேருகிறது. இதில் சாதனை அளவும் உண்டு. 2012 ஏப்ரல் 1-ந் தேதி ஒரு நாளில் மட்டும் 5.73 கோடி குவிந்தது. மேலும் வாரத்துக்கு 12 கிலோ தங்கம் உண்டியலில் காணிக்கையாக விழுகிறது. உலக கோடீஸ்வரர்கள் உண்டியலுக்குள் வைரங்களை கொட்டிவிட்டு போகிறார்கள். இப்படி கொட்டிய வைரங்களும் தங்கமும் சேர்ந்து 1,000 டன்களுக்கு மேல் வந்துவிட்டது.

அதை வங்கியில் டெபாசிட் செய்தால் அதற்கு வட்டியாக மட்டும் ஆண்டுக்கு 225 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. அமைச்சர் ஒருவர் வைரக்கற்கள் பதித்த தங்க கிரீடத்தை காணிக்கையாக கொடுத்தார். அதன் மதிப்பு 45 கோடி ரூபாய். பகிரங்கமாகவும், ரகசியமாகவும் வரும் காணிக்கை ஒவ்வொன்றும் மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. திருப்பதியில் முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தான் உண்டியலை மாற்றினார்கள்.

இப்போது தினமும் 10 தடவைக்கு மேல் மாற்றுகிறார்கள். அப்படி இருந்தும் நிரம்பி வழியும் காணிக்கையை கட்டுபடுத்த முடியவில்லை. உலகம் முழுவதும் உள்ள பல கம்பெனிகளுக்கு வெங்கடாஜலபதி முதல் போடாத பங்குதாரராக இருக்கிறார். முதல் போடாவிட்டாலும் லாபத்தின் பங்கு பைசா குறையாமல் வந்துவிடும். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியிலும் எக்கச்சக்க வருமானம் உண்டு. வருடத்துக்கு 40 கோடி ரூபாய் வசூலை குவிக்கிறது, இந்த தலைமுடி.

பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலின் நாயகன் ஏழுமலையான் அணிந்திருக்கும் கிரீடம் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால் கொடுக்கப்பட்டது. முகலாய மன்னர் ஷாஜகான் 100 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட தங்கச்சங்கிலி ஒன்றை காணிக்கையாக கொடுத்திருக்கிறார். திருப்பதி கோவிலில் வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் பேருக்கு அதிகம். உலக கோடீஸ்வரனை தரிசித்து வந்தால் நாமும் கோடீஸ்வரனாகலாம் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

Leave a Reply