உலர் பழ அல்வா

halva

தேவையான பொருள்கள்

தேங்காய்த் துருவல் – ½ கப்

கேரட் – 250 கிராம்

பேரீச்சம் பழம் – 150 கிராம்

சர்க்கரை – 300 கிராம்

பால் – 500 மி.லிட்டர்

பாதாம் – 100 கிராம்

திராட்சை – 10

நெய் – 300 கிராம்

ஏலக்காய்த்தூள் – 2 டீஸ்பூன்

வேர்க்கடலை – 50 கிராம்

முந்திரி – 100 கிராம்

செய்முறை

பாதாம், முந்திரி, வேர்க்கடலை அனைத்தையும் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய் சேர்த்து, துருவிய தேங்காய், அரைத்துவைத்துள்ள பாதாம், முந்திரி, வேர்க்கடலை விழுதைப் போட்டுக் கிளறவும்.

பின்பு, பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம், திராட்சை, சிறிது பால் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

பின்னர் தேவையான சர்க்கரை, ஏலக்காய்த் தூள், நெய் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும்.

இறுதியாக, துருவிய கேரடை தூவி பரிமாறவும்.

Leave a Reply