பதவி விலகும் கடைசி நேரத்தில் ஹைத்தி மக்களிடம் மன்னிப்பு கேட்ட பான்கீ மூன்
கடந்த பத்து ஆண்டுகளாக ஐ.நா.சபையின் பொதுச்செயலாளராக இருந்து வரும் பான்கீ மூன் முதல்முறையாக மன்னிப்பு கேட்டுள்ளார். ஹைத்தி நாட்டில் பரவிய காலராவை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்காக அந்நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010ஆம் ஆண்டு வரை காலரா என்றால் என்ன என்பதையே அறிந்திராத ஹைத்தி நாட்டில் 2011ஆம் ஆண்டு மிக வேகமாக காலரா நோய் பரவியது. ஐ.நா. அமைதி படையின் வீரர்கள் ஹைத்தி சென்றிருந்தபோது அவர்களுடைய குப்பையை அந்நாட்டின் குடிநீருக்கு ஆதாரமாக இருந்த ஆற்றில் கலந்ததால்தான் இந்த காலரா நோய் அங்கு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நோயினால் சுமார் 80 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கு நிவாரணமாக 20 கோடி அமெரிக்க டாலர்களை தொகுப்பு நிதியாக திரட்ட ஐக்கிய நாடுகள் சபை முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த மாதம் ஐ.நா. சபையின் பதவிக்காலம் பான்கீ மூன் அவர்களுக்கு முடிவடைய உள்ள நிலையில் ஹைத்தியில் காலரா பரவுவதற்கு காரணமாக இருந்ததற்காகவும், அதை தனது பதவிக்காலத்தில் பரவாமல் தடுக்க தவறியதற்காகவும் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.