காஷ்மிர் பிரச்சனையில் தலையிட முடியாது. பாகிஸ்தானுக்கு ஐ.நா. பதில்.

Un
காஷ்மீர் பிரச்சினையில் உலக நாடுகள் தலையிடவேண்டும் என்ற பாகிஸ்தானின் முயற்சி படுதோல்வியில் முடிந்துள்ளது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள ந்லையில் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் புகுந்து பாதுகாப்பு படைகளின் நிலைகள் மீதும்,  அருகிலுள்ள கிராம மக்களின்  மீதும் தாக்குதல் நடத்தியது. இதனால் பாரத பிரதமர் மோடியின் உத்தரவை தொடர்ந்து இந்திய ராணுவமும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் தற்போது தாக்குதலை நிறுத்திவிட்டு, உலக நாடுகளிடம் தனது புலம்பலை ஆரம்பித்துள்ளது. ஆனால் இதற்கு உலக நாடுகள் செவி சாய்க்கவில்லை.

இந்த  பிரச்சினையை திசை திருப்பும் வேண்டும் என்பதற்காக பாகிஸ்தானின் எல்லையில் இந்தியா தாக்குவதாக அபாண்டமாக புகார் கூறி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு கடிதம் எழுதி உள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ், பான் கீ மூனுக்கு கடிதத்தில், இந்தியாவுடன் அண்மைக்காலமாக எல்லையில் பதட்டமான சூழல் நிலவுவதாகவும் இதில் ஐக்கிய நாடுகள் தலையிட்டு காஷ்மீர் விவகாரத்தை  சர்வதேச பிரச்சினையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் செய்தி தொடர்பாளர் பார்ஹான் ஹாக்கிடம், காஷ்மீர் விவகாரத்தில் ஐநா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் எழுதிய கடிதம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பர்ஹான் ஹாக் , காஷ்மீர் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அமைதியான மற்றும் நிலையான காஷ்மீருக்காக ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த பிரச்சனையில் இப்போதைய நிலையில் ஐ.நா தலையிடாது என்று அவர் மேலும் கூறிவிட்டார். இதனால் பாகிஸ்தான் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Leave a Reply