எதிர்காலத்தில் சென்னை உள்பட தென்னிந்தியாவுக்கு மழையால் பெரும் பாதிப்பு. ஐ.நா. எச்சரிக்கை

எதிர்காலத்தில் சென்னை உள்பட தென்னிந்தியாவுக்கு மழையால் பெரும் பாதிப்பு. ஐ.நா. எச்சரிக்கை
flood
இனி தென்னிந்தியாவுக்கு மழையால் தொடர்ந்து ஆபத்துதான் என ஐ.நா. அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

சமீபத்தில் தமிழகம், ஆந்திரா மாநிலங்களில் கனமழை பெய்து நூற்றுக்கணக்கான மனித உயிர்களையும், கோடிக்கணக்கான பொருள் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு வருடம் பெய்ய வேண்டிய மழை ஒருசில நாட்களில் ஏன் பெய்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் எல்-நினோ குறித்து ஐ.நா. நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்னிந்தியா உள்பட ஆசியாவின் பல பகுதிகளில் வழக்கத்துக்கு மாறான அதிகப்படியான மழைப்பொழிவு தொடர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்பட பல நகரங்களுக்கு எதிர்காலத்திலும் மழை, வெள்ளத்தால் ஆபத்து இருக்கின்றது என்பது உறுதியாகியுள்ளது.

நேற்று ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “2015 மற்றும் 2016-ல் எல்-நினோவின் பாதிப்பானது மத்திய பகுதி நாடுகளில் கடுமையாகலாம். கம்போடியா, மத்திய மற்றும் தென்னிந்தியா, கிழக்கு இந்தோனேஷியா, மத்திய மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸ், மத்திய மற்றும் வடகிழக்கு தாய்லாந்து பகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம்” என்று கூறப்பட்டுள்ளது

தென்கிழக்கு ஆசிய நாடுகள் குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கை இதனால் அதிக பாதிப்பை சந்திக்கும் என்றும் இங்கு அதிகப்படியான வெள்ளமும், பசிபிக் தீவுகளில் உள்ள பபுவா நியூகினியா, டிமோர் லெஸ்டே, வான்துவா போன்ற நாடுகளில் வறட்சியினால் தண்ணீர் பஞ்சம், உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சென்னைவாசிகள் வரும் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

English Summary: UN warns of ‘more than normal rains’, flooding in South India including Chennai

Leave a Reply