சீனாவுக்கு வடகொரிய அதிபர் ரகசிய பயணமா? திடுக்கிடும் தகவல்

சீனாவுக்கு வடகொரிய அதிபர் ரகசிய பயணமா? திடுக்கிடும் தகவல்

வடகொரியாவும் அமெரிக்காவும் கடந்த சில ஆண்டுகளாக எதிரெதிர் கருத்துக்களை கொண்டு போர் மூளும் சூழல் இருந்த நிலையில் தற்போது இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தங்களுக்கு இடையேயுள்ள பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளன. வரும் மே மாதம் டிரம்ப் மற்றும் கிம்ஜாங் உன் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் எதிரிநாடுகளில் ஒன்றான சீனாவுக்கு கிம்ஜான் உன் ரகசிய பயணம் மேற்கொண்டதாக உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று வெளியாகி உலக நாடுகளை திடுக்கிட வைத்துள்ளது

இதுகுறித்து சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரகசியமாக சீனா வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு வட கொரியா அதிபராக பொறுப்பேற்ற அவர், நாட்டை விட்டு வெளியேறி எந்த நாட்டுக்கும் சென்றதில்லை. முதல் முறையாக சீனா சென்றுள்ளார். அங்கு சீன அதிபர் மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபபடுத்தப்பட்டு உள்ளது. கிம் ஜாங் உன்னின் இந்த சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என குறிப்பிட்டுள்ளன. ஆனால் இந்த தகவலை சீனா மற்றும் வடகொரியா அரசுகள் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply