ஜப்பான் அருகே கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம். சுனாமி தாக்குமா?
ஜப்பான் நாட்டில் அடிக்கடி பூகம்பம், சுனாமி மற்றும் பெருவெள்ளம் ஆகிய இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து தென்கிழக்கே சுமார் 226 கிலோமீட்டர் தூரத்தில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுக்கோலில் 6.4 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இருப்பினும் கடலில் அலைகளின் எழுச்சி மிக வேகமாக இருக்கும் என்றும் இதனால், ஜப்பானுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட வாய்ப்பிலை என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.