பாஜக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட்: வரிகள் எப்படி இருக்கும்?
அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து பாஜக அரசு தாக்கல் செய்யும் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்யும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் வரிச்சலுகை இருக்குமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டோடு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் இரண்டு பட்ஜெட்டுக்களையும் அருண்ஜெட்லி தாக்கல் செய்யவுள்ளார்
ஜிஎஸ்டி அறிவிப்புக்கு பின்னர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுதான். இருப்பினும் ஜிஎஸ்டியில் பல பொருட்களுக்கு வரிக்குறைப்பு செய்து வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் அதிக வரிச்சலுகை இருக்காது என்றே கூறப்படுகிறது
இருப்பினும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் 8 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனை கணக்கில் கொண்டே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.