தூத்துக்குடியில் சைனிக் பள்ளியை திறக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் 21 புதிய சைனிக் பள்ளிகளை தொடங்குவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையுடன் ராணுவத்தில் சேர்வது உட்பட சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில், தரமான கல்வியை அளிக்க 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் இது தொடங்கப்படவுள்ளது.