வெள்ளை மாளிகை, பெண்டகன் மீது ஆளில்லா விமானம் பறக்கவிட தடை. அமெரிக்கா அறிவிப்பு

flightஅமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகை, பாராளுமன்ற கட்டிடம், பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது ஆளில்லா விமானங்கள் பறக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (எப்.ஏ.ஏ.) அதிரடியாக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பகுதியில் ஆளில்லா விமானங்களை பறக்க விடுவது கடுமையான குற்றம் என்றும் இந்த குற்றத்தை செய்பவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிறுவனம் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவு ஒன்றில் கூறியிருப்பதாவது, “வெளிநாட்டில் இருந்தும் உள்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்தும் வாஷிங்டனுக்கு சுற்றுலாப்பயணிகளாக வருபவர்கள் சந்தோஷமாக உங்கள் குடும்பத்தினரை அழைத்து வரலாம் என்றும் கேமராக்களை கொண்டு புகைப்படங்கள் எடுத்து மகிழலாம் என்றும், ஆனால் ஆளில்லா விமானங்களை மட்டும் வீட்டிலேயே விட்டு விட்டு வாருங்கள்” என்றும் கூறப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் ஏற்கனவே ரொனால்ட் ரீகன் சர்வ தேச விமான நிலையத்தின் 15 மைல்கள் சுற்றளவுக்கு ஆளில்லா விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவ்வளவு எச்சரிக்கையையும் மீறி வாஷிங்டன் வெள்ளை மாளிகை பூங்காவுக்கு வெளியே ஆளில்லா விமானத்தை பறக்க விட்டதாக ஒருவரை வெள்ளை மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

Leave a Reply