காற்று மாசுபடுவதை தடுக்க செயற்கை மழை. டெல்லி அரசு யோசனை
டெல்லியில் கடந்த பல ஆண்டுகளாக இல்லாத வகையில் மாசு மிக அதிகமாக உள்ள நிலையில் மாசுவை கட்டுப்படுத்த டெல்லி அரசும், மத்திய அரசும் தீவிர முயற்சி செய்து வருகிறது.;
இந்நிலையில் மாசுவை கட்டுப்படுத்த செயற்கை மழை வரவழைக்கும் யோசனையை டெல்லி அரசு ஆலோசித்து வருகிறது. மேலும் மாசுவை கட்டுப்படுத்த இதுபோன்ற ஆக்கபூர்வமான ஆலோசனைகளை கூறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என டெல்லி அரசு
அறிவித்துள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாக டெல்லியில் மாசுவின் அளவு அதிகளவு இருப்பதால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.