உன்னாவ் பாலியல் வழக்கு: நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு
உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை குற்றவாளி என
டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ’நான் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் தன்னை கடத்திச் சென்று கற்பழித்து விட்டார்’ என போலீசில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில் புகார் அளித்த பெண் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில் இளம்பெண்ணும் அவரது தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இந்த விபத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ண கொல்வதற்கு நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்காருக்கு எதிராக கடந்த ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் குல்தீப் சிங் செங்காரை குற்றவாளி என
டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது