சென்னை நகரம் சரியான திட்டமிடல் இல்லாததே வெள்ள பாதிப்புக்கு காரணம். அமெரிக்க நிபுணர்கள் கருத்து

சென்னை நகரம் சரியான திட்டமிடல் இல்லாததே வெள்ள பாதிப்புக்கு காரணம். அமெரிக்க நிபுணர்கள் கருத்து
chennai2
கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது, சரியான நகர திட்டமிடல் இல்லாததே இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம், எதிர்கால நகர திட்ட மிடலுக்கு சென்னை ஒரு படிப்பினை’ என்று அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை மழைவெள்ளம் மற்றும் மீட்புப்பணிகள் குறித்து அமெரிக்க வாழ் இந்தியரான கட்டடவியல் நிபுணர் நம்பி அப்பாதுரை கூறியதாவது, “பருவநிலை மாறுபாட்டில் சென்னையில் 17 நாட்களுக்கு இடைவிடாது மழை பெய்கிறது. இந்த மழை, மூலம் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் மிக்ஸிகன் பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்வின் கூறியபோது, சென்னை மழை வெள்ளத்துக்கு சரியான நகர திட்டமிடல் இல்லாததே முக்கிய காரணம், இது ஒரு படிப்பினை. இயற்கை பேரழிவுகளை எதிர் கொள்ளும் வகையில் நகரங்களை வடிமைக்க நகர திட்டமிடல் குறித்து இந்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.

பொருளாதாரத் துறை நிபுணர் புனித் மன்சந்தா கூறிய போது, “சென்னையின் உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளன, இதனால் தமிழக சுற்றுலா பாதிக்கப்படும்” என்றார்.

சுகாதாரத் துறை நிபுணர் மேத்யூ கூறியபோது, “சென்னையின் தற்போதைய கனமழை வெள்ள பிரச்சினையோடு நிறைவு பெறாது, இதைத் தொடர்ந்து தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகம் உள்ளது” என்றார்.

English Summary:  Unplanned constructions and illegal structures is the main reason for flood damages said US experts

Leave a Reply