மேகியை அடுத்து சர்ச்சையில் சிக்கியது காம்ப்ளான். தடை வருமா?

complanகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருந்த மேகி நூடுல்ஸ் உணவுப்பொருள் தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் உணவு என்று கூறப்பட்ட காம்ப்ளான் உணவுப்பொருளும் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது.

குழந்தைகள் உயரமாக வளர உதவும் உணவுபொருள் என்று விளம்பரப்படுத்தப்பட்ட காம்ப்ளானில் நூற்றுக்கணக்கான புழுக்கள் இருந்ததாக தற்போது புகார்கள் வந்துள்ளதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த  தாய்மார்கள் மேகியை நிறுத்தியது போல காம்ப்ளானையும் நிறுத்த உள்ளதாக கூறியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு கொடுப்பதற்காக காம்ப்ளான் டப்பாவை திறந்தபோது அதில் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் நூற்றுக்கணக்கான இறந்த புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பேசிய அந்தப் பெண்மணி  கூறும் போது ” பல ஆண்டுகளாகவே காம்ப்ளானை பயன்படுத்தி வருகிறோம். நூற்றுக்கணக்கான புழுக்கள் என்பதால் பார்க்க முடிந்தது. குறைவாக இருந்திருந்தால் எப்படி தெரிந்திருக்கும் .மேகி சாப்பிடுவதை நிறுத்தியதை போல காம்ப்ளான் சத்து மாவு சாப்பிடுவதை நிறுத்த போகிறோம்” என்றார் ஆவேசமாக.

அந்தப்  பெண்ணின் கணவர் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழகத்திடம் புகார் அளித்தன் பெயரில் புழுக்கள் கிடந்த காம்ப்ளான் பாக்கெட் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேகி நூடுல்சைத் தொடர்ந்து காம்ப்ளானும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply