உ.பி. சட்டமன்ற தேர்தல். ஷீலா தீட்சித் திட்டம் பலிக்குமா?

உ.பி. சட்டமன்ற தேர்தல். ஷீலா தீட்சித் திட்டம் பலிக்குமா?

sheela deetchithஉத்தரபிரதேச மாநில சட்டமன்றத்திற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவிருப்பதால் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. உ.பியில் வரும் தேர்தலில் ஆளும் சமாஜ்வாடி, பா.ஜனதா, காங்கிரஸ், பகுஜன்சமாஜ் ஆகிய 4 கட்சிகளும் தனித்து போட்டியிடவுள்ளதால் இம்முறை நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், வெற்றி யாருக்கு என்று கணிக்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்படுவார் என தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் தற்போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கபப்ட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இருந்துதான் ஷீலா தீட்சித் முதன்முறையாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் டெல்லி மாநில அரசியலுக்கு வந்து 3 முறை தொடர்ச்சியாக முதல்- மந்திரியாக இருந்தார். கடந்த தேர்தலில் ஷீலா தீட்சித் தோல்வி அடைந்ததால் மீண்டும் உத்தரப்பிரதேச அரசியலுக்கு திரும்பியுள்ளார்.

உ.பி மாநில காங்கிரஸ் தலைவர் நடிகர் ராஜ்பாப்பருடன் இணைந்து கட்சி பணிகளை தீவிரமாக கவனித்து வரும் ஷீலா, தேர்தல் பிரசார பயணத்தை மாநிலம் முழுவதும் பேருந்தில் செல்லவுள்ளாராம். இதற்கென ஸ்பெஷ்ல பஸ் தயாராகி வருகிறது.

Leave a Reply