ஆச்சரியம் அடைந்த அண்டை மாநில முதல்வர்
உத்தரபிரதேச பிரதேச மாநில அரசு திடீரென நேற்று இரவு தனது அண்டை மாநிலமான ராஜஸ்தானுக்கு 2500 பேருந்துகளை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு சுமார் 750 உயர் கல்வி பயில மாணவர்கள் பலர் சென்றிருந்தனர். ஆனால் திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த மாநிலத்திற்கு வரமுடியாமல் கஷ்டப்படுவதை அறிந்த உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக மாணவர்களை அழைத்து வர 2500 பேருந்துகளை அனுப்பியுள்ளார்.
முன்னதாக அவர் ராஜஸ்தான் மாநில முதல்வரிடம் இதுகுறித்து பேசியதாகவும் அதனை அடுத்தே இந்த பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ராஜஸ்தானில் சிக்கியிருக்கும் மாணவரகள் இன்று உத்திரப்பிரதேசம் திரும்புவாரக்ள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மாணவர்கள், பேருந்துகள்,