சென்னையில் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.

akilesh yadavசமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மகனும், உத்தரபிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் நேற்று சென்னைக்கு வந்தார். அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 அகில இந்திய யாதவ மகா சபாவின் துணைத் தலைவர் நந்தகோபால் அவர்களின் மகள் திருமண விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்த உ.பி முதல்வருக்கு யாதவ மகா சபாவின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சென்னை வானகரம் ஸ்ரீவாரி கல்யாண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

லக்னோவில் இருந்து தனி விமானத்தில் வந்திருந்த முதல்வர் அகிலேஷ் யாதவ், திருமணத்தில் கலந்து கொண்ட பின்னர் மாலை லக்னோ திரும்பினார். அவர் தமிழக அரசியல் தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply