எதிரெதிர் அணிகளில் லாலுபிரசாத்-நிதீஷ்குமார். உ.பியில் 4 முனை போட்டி அமைய வாய்ப்பு

எதிரெதிர் அணிகளில் லாலுபிரசாத்-நிதீஷ்குமார். உ.பியில் 4 முனை போட்டி அமைய வாய்ப்பு

niteshபீகார் மாநிலத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா கட்சியும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. மாநில தேர்தலில் இந்த இரு கட்சிகளும் எதிரெதிர் அணிகளில் மோதவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி முலாயம் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடன் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியுடன் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிகாரில் குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் மெகா கூட்டணியில் இருந்து வெளியேறிய சமாஜ்வாதி கட்சி தற்போது உ.பி.தேர்தலுக்காக லாலு பிரசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஏற்கனவே இருவரும் சம்மந்திகள் என்பதால் இந்த புதிய கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் உ.பி.யிலும் மதுவிலக்கை முன்னிறுத்தி பேசிவரும் நிதிஷ்குமார், பிகாரை போல அங்கும் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளார். ஆனால் இதற்கு உ.பி.யில் பெரிய ஆதரவு இல்லை என்பதால் அவர் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனவே உ.பியில் முலாயம்-லாலு கூட்டணி, நிதிஷ்-காங்கிரஸ் கூட்டணி, மாயாவதி கட்சி மற்றும் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி என நான்குமுனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply