பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படிக்கெட்டுக்களை இடிக்க முடிவா?
கான்பூரில் மோடி தவறி விழுந்த படிக்கட்டுகளை இடிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
சமீபத்தில் நடைபெற்ற தேசிய கங்கை ஆணையத்தின் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கான்பூருக்கு சென்று இருந்தார். அப்போது கூட்டம் நடைபெறும் இடத்துக்கு பிரதமர் மோடி சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒரு படி தடுக்கி அவர் கீழே விழுந்தார்.உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தூக்கிவிட்டனர். இருப்பினும் பிரதமருக்கு எந்தவித காயமும் இல்லை
அந்த ஒரு படி மட்டும் சற்று உயரமாக இருந்ததால் அவர் கவனிக்காமல் கீழே விழுந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி தடுக்கி விழுந்த அடியை ஆய்வு செய்த பொறியாளர்கள் அந்த படியை எடுத்து விட்டு மற்ற படிகள் போல் சம உயரத்தில் இருக்கும் அளவுக்கு வடிவமைக்க முடிவு செய்துள்ளனர் இதனையடுத்து அந்த படியை இடிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது