ஆசிரியர்கள் ஜீன்ஸ், டீசர்ட் அணிய தடை. உ.பி முதல்வர் அதிரடி உத்தரவு
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றதில் இருந்து அமெரிக்க அதிபர் டிரெம்புக்கு நிகராக தினந்தோறும் ஒரு அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஜீன்ஸ், டிசர்ட் போன்ற நவீன ஆடைகளை அணிய அரசு என உபி அரசு அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு, ஆண், பெண் என இருதரப்பு ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்கள் பணியில் இருக்கும் நேரத்தில் செல்ஃபோனில் பேசக் கூடாது என்றும், தாங்கள் பணிபுரியும் பள்ளியை, சுத்தமாக வைத்துக் கொள்வது ஒவ்வொரு ஆசிர்யர்களின் கடமை என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.