உத்தரபிரதேச மாநிலத்தில் 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட சம்பவத்தின் அதிர்சி ஓய்வதற்குள் மேலும் ஒருசில பலாத்கார சம்பவங்கள் உத்தரபிரதேசத்தில் நடந்து கொண்டிருப்பதால் அம்மாநில அரசுக்குகடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. மத்திய அரசு உத்தரபிரதேச அரசை கண்டித்துள்ளது.
இதற்கு பதிலளித்த உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ்வின் தந்தை முலாயம்சிங் யாதவ், ” கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்புவர்கள் டெல்லியில் போய் தங்குங்கள்” என்று சர்ச்சைக்குரிய பதிலை கொடுத்துள்ளார். முலாயம்சிங் யாதவ்வுக்கு ஆதரவாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சரும், “”பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்கள் அதுகுறித்து எங்களுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்துவிட்டா அக்குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்” என்று கேலியாக கமெண்ட் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட்டுள்ளது.
இந்த விஷயத்தை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன என்றும், உலகத்தில் தினந்தோறும் பல பகுதிகளில் பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துகொண்டே இருக்கின்றது என்றும், உ.பியில் நடந்த சம்பவத்தை மட்டும் ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
முதல்வர் அகிலேஷ் யாதவ், அவருடைய தந்தை முலாயம் சிங் யாதவ் மற்றும் ம்.பி உள்துறை அமைச்சர் ஆகியோர்களின் திமிர்த்தனமான பதில்களுக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.