உத்தரபிரதேசத்தின் முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி?

உத்தரபிரதேசத்தின் முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி?

priyankaஉத்தரப் பிரதேச மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்து வருகிறார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட முடிவு செய்து உள்ளன.

இந்த மாநிலத்தின் தேர்தல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவதால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை பிரியங்கா காந்தி தலைமையேற்று நடத்துவார் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்திரா காந்தியின் பேத்தி, ராஜீவ் காந்தியின் மகள் என்பதால் பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் கண்டிப்பாக இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துவிடும் என்றே கூறப்படுகிறது. பிரியங்கா காந்தி களத்தில் இறங்கினால் அதற்கு பதிலடி கொடுக்க என்ன நடவடிக்கைகளை பிற கட்சிகள் எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

UP state CM candidate is Priyanka?

Leave a Reply