தேர்தல் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த இரண்டு மக்களவை தொகுதிகளான கோரக்பூர், மற்றும் புல்பூர் தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்தது தெரிந்ததே. இந்த இரண்டு தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி, மாயாவதி கட்சியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தது மட்டுமின்றி டெபாசிட்டையும் இழந்தனர். இதற்கு உபி மாநில காங்கிரஸ் தலைவரின் செயல்பாடுகள் சரியில்லை என்று கட்சிக்குள்ளேயே அவருக்க்கு எதிர்ப்பு கிளம்பியது
இந்த நிலையில் உ.பி., மாநில காங்., தலைவர் ராஜ்பாப்பர், தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று அவர் தனது ராஜினாமாவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. உபி மாநில புதிய காங்கிரஸ் தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.