சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியதாக தகவல்

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியதாக தகவல்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குவாங்கியான் நகரில் இருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ள ஜியுஜாய்கோவ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 6 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில நடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனை உணா்ந்த மக்கள் பெரும் அச்சத்துடன் வீதிகளில் ஓடத் தொடங்கினா். மீட்புப் படையினா் சிச்சுவான் மாகாணத்தை நோக்கி விரைந்துள்ளனா். இதுவரை நிலநடுக்கத்தின் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சிச்சுவான் மாகாணத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தொிகிறது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும், பல ஆயிரம் வீடுகள் சேதடைந்துள்ளதாகவும் சீனா அரசு தொிவித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 ஆயிரம் போ் பலியாகினர் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply