கேரள ஆளுனரை டிஸ்மிஸ் செய்ய முடிவு? மத்திய அரசு அதிரடி

kerala governorமத்தியில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்து நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பாரதிய ஜனதா ஆட்சி  அமைந்ததை அடுத்து ஒருசில மாநில கவர்னர்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்த முன்னாள் தலைவர்கள் கவர்னர்களாக இருக்கும் மாநிலங்களில் கண்டிப்பாக கவர்னர்களை மாற்றவேண்டும் என்பதில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் உறுதியாக இருந்தனர்.

மத்திய அரசின் நெருக்கடியை புரிந்துகொண்ட ஒருசில கவர்னர்கள் தாங்களாகவே பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களில் உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், நாகலாந்து ஆகிய மாநில கவர்னர்கள் ஆவார்கள். ஆனால் கேரள மாநில கவர்னர் ஷீலா தீட்சித் பதவி விலக மறுத்து வந்ததால் பாஜக மேலிடம் அதிருப்தி அடைந்தது.

எனவே முதல்கட்டமாக கேரள ஆளுனர் ஷீலா தீட்சித்திடம் ஏதாவது ஒரு சிறு மாநில கவர்னராக மாற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை எனில் அவரை பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய அதிரடி முடிவு எடுக்கவும் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.

 குஜராத், கர்நாடகா மாநிலம் உள்பட தற்போது 6 மாநில கவர்னர் பதவி காலியாக உள்ளது. இந்த 6 இடங்களுக்கும் புதிய கவர்னரை நியமனம் செய்யும்போது கேரளாவிற்கும் புதிய கவர்னரை நியமனம் செய்ய மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் ஷீலா தீட்சத் அதற்கு இடையூறாக இருப்பதால் இன்னும் ஒருசில நாட்களில் அவர் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply