அருணாச்சல பிரதேசத்தில் அமெரிக்க தூதர். சீனா கண்டனம்

அருணாச்சல பிரதேசத்தில் அமெரிக்க தூதர். சீனா கண்டனம்

arunachal-pradeshஇந்தியாவின் ஒரு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் தனக்கும் உரிமை இருப்பதாக சீனா அவ்வப்போது கூறி வரும் நிலையில் சமீபத்தில் அம்மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க தூதர் கலந்து கொண்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லு கங் செய்தியாளர்களிடம் கூறியபோது, ’இந்தியா சீனா எல்லை விவகாரத்தில் அமெரிக்கா தலையீடு தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும், அமைதியை சீர்குலைக்கும். இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள சீனா விரும்புகிறது’ என்று கூறினார்.

அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. அருணாச்சல் பிரதேச எல்லையில் சுமார் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு தெற்கு திபெத் நாட்டை சேர்ந்தது என்று சீனா கூறி வருகிறது.

இதனால் அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பகுதிக்கு இந்திய அல்லது உலக தலைவர்கள் வருகை தரும் பொழுதெல்லாம் சீனா தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply