தென்கொரிய தலைநகரில் பிளேடால் தாக்கப்பட்ட அமெரிக்க தூதர். அதிர்ச்சி புகைப்படங்கள்.

  தென்கொரிய தலைநகரில் பிளேடால் தாக்கப்பட்ட அமெரிக்க தூதர். அதிர்ச்சி புகைப்படங்கள்.

அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே பல வருடங்களாக பனிப்போர் நடந்து வரும் சூழ்நிலையில் நேற்று தென்கொரியாவுக்கான அமெரிக்க தூதர் மர்ம நபர் ஒருவரால் பிளேடால் தாக்கப்பட்டார். இதனால் இருநாடுகளுக்கு இடையே பதட்டம் அதிகரித்துள்ளது.

US ambassador 1

தென்கொரியாவுக்கான அமெரிக்க தூதர் மார்க் லிப்பர்ட் நேற்று தென்கொரிய தலைநகர் சியோலில் காலை உணவு சாப்பிட ஒரு ரெஸ்டாரெண்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை திடீரென வழிமறித்த மர்ம நபர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த பிளேடால், அமெரிக்க தூதரின் முகம் மற்றும் கைகளில் கீறினார். இதனால் ரத்தவெள்ளத்தில் மிதந்த அவரை அவருடைய பாதுகாவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

US ambassador

அமெரிக்க தூதரை பிளேடால் கீறியவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருவதாக தென்கொரிய போலீசார் கூறியுள்ளனர். சியோல் நகரின் YTN தொலைக்காட்சி இந்த அதிர்ச்சி சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பி வருவதாக இருநாடுகள் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது. அமெரிக்க தூதரின் தாக்குதலுக்கு வெள்ளை மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

US ambassador 2

Leave a Reply