விற்பனைக்கு வந்த அமெரிக்க நகரம். விலை ரூ.53 கோடிதான்
அமெரிக்காவில் ஒரே ஒரு வீடு வாங்கவே பலகோடி தேவை என்ற நிலை இருக்கும்போது ஒரு நகரத்தின் விலையே ரூ.53 கோடி என தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் நான்சி கிட் வெல் மற்றும் அவரது முதல் கணவர் ஸ்லிம் தம்பதிகளுக்கு லாஸ் வேகாஸ் அருகே சல்-நெவ்-ஆரி என்ற சிறிய நகரம் சொந்தமாக உள்ளது. இந்த நகரம் கலிபோர்னியா, நெவேடா, அரிசோனா ஆகிய 3 மாகாணங்களின் எல்லைகளையில் இருப்பதால் இந்நகருக்கு கல்-நெவ்- அரி என பெயரிட்டுள்ளது
மொத்தமே 375 பேர்கள் மட்டுமே வசிக்கும் இந்த நகரத்தில் ஓட்டல், ஜெனரல் ஸ்டோர், லாண்டரி, சமுதாய மையம் மற்றும் விளையாட்டு கூடம் ஆகிய அத்தியாவசிய தேவைகள் உள்ளது. தற்போது இந்நகரத்தை விற்பனை செய்யவுள்ளதாக நான்சி தெரிவித்துள்ளார். தற்போது 78 வயதாகும் நான்சிக்கு வாரிசுகள் இல்லாததால் இந்நகரத்தை விற்க முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான விலை ரூ.53 கோடி என்றும் அறிவித்துள்ளார்.
2ஆம் உலகப் போரின் போது நான்சியும் அவரது முதல் கணவரும் சேர்ந்து 640 ஏக்கர் நிலத்தை வாங்கினார்கள். அப்போது அங்கு தண்ணீர், மின்சார வசதி இல்லை. கடுமையாக உழைத்து கஷ்டப்பட்டு அப்பகுதியை சிறிய நகரமாக உருவாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.