சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்காவின் செனட் சபைக்கு நடந்த இடைத்தேர்தலில் எதிர்கட்சியான குடியரசு கட்சி, பெருபான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 36 இடங்களுக்கும் 36 கவர்னர் பதவிகளுக்கும் சமீபத்தில்இடைதேர்தல் நடைபெற்றது. செனட் சபையில் 42 இடங்களை மட்டுமே பெற்றுள்ள எதிர்க்கட்சியான குடியரசு கட்சி 7 தொகுதிகளில் வெற்றி பெற்று தன்னுடைய பலத்தை 52ஆக உயர்த்தியுள்ளது. செனட் சபைக்கு நடைபெற்றா தேர்தலில் 435 இடங்களில் 243 இடங்களில் குடியரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஒபாமாவின் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை செனட் சபையில் இழந்துள்ளது.
இதன்மூலம் ஒபாவின் திட்டங்களை செய்லபடுத்த எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் ஆதரவு கண்டிப்பாக தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாடாளுமன்றமே குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டிற்கு மாறியுள்ளதால் ஒபாமாவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.