அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு

hilariஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதை ஒட்டி புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பரில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்ய பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக நடந்து வந்தன.

இந்நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் இதுவரை அவரது பெயர் அதிபர் வேட்பாளர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால் இன்று அவர் , ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட,அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு பிரைமரி தேர்தலில் 2,383 வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலையில் ஹிலாரி கிளிண்டன் 2,842 வாக்குகள் பெற்றுள்ளதால் அவர் வேட்பாளராக உறுதி செய்யப்பட்டார்.

ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் வேட்பாளராக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு விட்டார். இருவருக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்று அடுத்த அமெரிக்க அதிபர் ஆவார் என்றே பல கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன

Leave a Reply