அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு. ஹிலாரி-டிரம்ப் இடையே இழுபறி

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு. ஹிலாரி-டிரம்ப் இடையே இழுபறி

hilari-trumpஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்த போதிலும் முடிவு இழுபறியில் உள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றி பெற 270 வாக்குகள் தேவை என்ற நிலையில் டொனால்ட் டிரம்புக்கு 167 வாக்குகளும், ஹிலாரி கிளிண்டனுக்கு 133 வாக்குகளும் கிடைத்துள்ளன. ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவான தொகுதிகளில் இனிமேல்தான் வாக்குகள் எண்ணப்படுவதால் திடீர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும் சிக்கலை சந்திக்கும் நிலை உண்டு. எனவே இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக இறங்கி வருவதால் முதலீட்டாளர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர்.

Leave a Reply