2 லட்சம் எல் சால்வடார் நாட்டினர் வெளியேற டிரம்ப் உத்தரவு
அமெரிக்காவில் தங்கியுள்ள எல் சால்வடார் நாட்டவர்ள் அமெரிக்காவில் இருந்து வெளியேற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், அவர்கள் வெளியேற 18 மாதங்கள் கால அவகாசம் கொடுத்துள்ளார்.
மத்திய அமெரிக்க கண்ட நாடான எல் சால்வடாரில் கடந்த 2001-ம் ஆண்டு இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், உடமைகளை இழந்த சுமார் 2 லட்சம் பேர் அமெரிக்காவிற்குள் அகதிகளாக நுழைந்தனர். இவர்களுக்கு அந்நாட்டு உள்துறை தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து வழங்கியது
இந்த நிலையில் 17 ஆண்டுகளாக அமலில் உள்ள தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து தற்போது விலக்கப்பட்டுள்ளதால் 18 மாதங்களில் எல் சால்வடார் நாட்டவர்கள் வெளியேற வேண்டும் என்றும் இல்லையேல் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால்
2 லட்சம் எல் சால்வடார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.