வடகொரியா செல்லும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி

வடகொரியா செல்லும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி

சமீபத்தில் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்து பேசினர். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த சந்திப்பில் அணு ஆயுத ஒழிப்பு குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ வரும் ஜூலை 5-ம் தேதி வடகொரியா சென்று அந்நாட்டு அதிபரை சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: வடகொரியாவுடன் அதிபர் கிம் ஜாங் அன்னுடன் போட்ட ஒப்பந்தம் குறித்தும், அணு சோதனை மையங்களை அழிப்பது தொடர்பாகவும் பேசுவதற்காக அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ ஜூலை 5-ம் தேதி வடகொரியா செல்ல உள்ளார் என தெரிவித்துள்ளது

Leave a Reply