ஓட்டல் சர்வராக பார்ட்டைம் வேலையில் சேர்ந்த ஒபாமாவின் மக்
நம்மூரில் கவுன்சிலர்களின் மகன்கள் கூட ஆடம்பர சொகுசுக்கார்களில் சுற்றித்திரியும் நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள் ஓட்டல் ஒன்றில் சர்வராக பணிபுரிந்து வருவதாக சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இளைய மகள் ஷாஷா ஒபாமா பகுதி நேர ஊழியராக பிரபல மீன் உணவகம் ஒன்றில் சர்வராக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்த உணவகத்திற்கு வந்து வேலை கேட்ட 15 வயது சிறுமிக்கு அந்த ஓட்டலின் உரிமையாளர் வேலை கொடுத்துள்ளார். அவருடைய வேலை வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுக்கும் உணவு வகைகளை பார்சல் செய்து தருவது, மற்றும் காலை நேரத்தில் வியாபாரத்துக்கு அந்த உணவகத்தை தயார்நிலைப்படுத்துவது. வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் காலை முதல் வேலை செய்த ஷாஷாவை மாலையில் வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக போலீஸ் உடையணிந்த பாதுகாவலர்கள் பெரிய காரில் துப்பாக்கியுடன் காத்திருப்பதை கண்டு சகப் பணியாளர்களும், ஓட்டல் உரிமையாளரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
பின்னர்தான், தங்களுடன் ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பது தங்கள் நாட்டின் அதிபரும், உலகின் மிக முக்கிய வி.ஐ.பி.யுமான பராக் ஒபாமாவின் இளைய மகளான ஷாஷா என்பது அவர்களுக்கு தெரியவந்தது.
நடாஷா என்ற முழுப்பெயர் கொண்ட ஷாஷா, அந்த உணவகத்தின் பணியாளர்களுக்கான சீருடையுடன் பாதுகாவலர்கள் புடைசூழ காரில் ஏறும் புகைப்படங்களை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.