அமெரிக்காவில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வைத்திருந்த ஐபோன் வெடித்து படுகாயம் அடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமெரிக்காவில் உள்ள கென்னிபங்க்ஸ் என்ற பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தன் சுடிதார் பையில் ஐபோன் வைத்திருந்தார். வகுப்பறையில் அவர் பாடத்தை கவனித்துக்கொண்டிருந்த போது திடீரென அவரது பையில் இருந்த ஐபோன் வெடித்தது. அதனால் அவருடைய சுடிதார் தீப்பிடித்தது. உடனே சக மாணவிகளும், ஆசிரியரும் சேர்ந்து தீயை அணைத்தனர். மாணவியின் தொடைப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவலை அந்த பள்ளியின் பிரின்சிபால் ஜெப்ரி ராட்மேன் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். மாணவியின் பெற்றோருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதாகவும், மாணவியின் ஐபோன் எதனால் வெடித்தது என்பதை கண்டுபிடிக்க விசாரணை நடத்தப்படும் என்றும் பிரின்சிபால் கூறினார்.