எச் 1பி விசா குறித்து அமெரிக்காவின் முக்கிய அறிவிப்பு
எச்-1பி விசா என்பது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டினருக்குரிய விசா என்பது தெரிந்ததே. இந்த விசாவை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடியாது. பணிக்காலம் முடிந்ததும் அங்கிருந்து அவர்கள் வெளியேற வேண்டும்.
இந்த விசாவை பயன்படுத்தி இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான ஐ.டி. ஊழியர்களை தொழில் நுட்ப நிறுவனங்கள் பணியில் அமர்த்தியுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்கா செல்வதற்கான எச்-1பி விசா விண்ணப்ப மனு வருகிற ஏப்ரல் 2-ந்தேதி முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் அனைத்து எச்-1 பி விசாவுக்கான பிரீமியம் விண்ணப்பம் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். மேலும் 2019-ம் ஆண்டுக்கான எச்-1 பி விசா மனு தாக்கல் வருகிற அக்டோபர் 1-ந்தேதி தொடங்கும்.
இந்த தகவலை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.