இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள், அமெரிக்காவில் பணியாற்ற எச்1பி விசா அவசியம். அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் கிளைகளைக் கொண்ட பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமானால், எல்1 விசா எடுக்க வேண்டும்.
இந்நிலையில், இந்த விசாக்களுக்கான கட்டணத்தை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை பிரிவு உயர்த்தி உள்ளது. எச்1பி விசாவுக்கு கூடுதலாக 4 ஆயிரம் டாலரும், எல்1 விசாவுக்கு 4,500 டாலரும் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த கட்டண உயர்வு, 2025-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதிவரை அமலில் இருக்கும்.
இந்த நடவடிக்கையால், இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 40 கோடி டாலர் கூடுதல் சுமை ஏற்படும் என்று கருதப்படுகிறது.