கடந்த 1983ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்த வால் லூயிஸ் என்பவர் போர் ஒன்றில் மரணம் அடைந்தார். அவருடன் அந்த போரில் 244 வீரர்களும் மாண்டனர். தற்போது லூயிஸில் ஆவி நான்கு வயது சிறுவனின் உடலில் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.
விர்ஜினியாவை பகுதியை சேர்ந்த ஆண்ட்ரு என்ற 4 வயது சிறுவன் உடலில் லூயிஸ் ஆவி புகுந்துள்ளதாகவும், போர்க்களத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் அந்த சிறுவன் கூறுவதையும் பார்த்து அவனது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் போர்க்களத்தில் தன்னுடன் மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்களுடைய பெயரை மிகச்சரியாக கூறுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆண்ட்ருவின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனைத்து தகவல்களையும் சரியாக சிறுவன் கூறுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஊடகங்கள் சிறுவனை பேட்டியெடுத்த வண்ணம் உள்ளனர்.