நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் 6 மாத காலம் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பட்ஜெட்டில் சுகாதார நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் தரப்படவில்லை. இதைத் தொடர்ந்து அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒபாமாவிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடும் நிதி நெருக்கடி கடந்த 17 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்களில் பணியாற்றிய 8 லட்சம் ஊழியர்களுக்கு 6 மாத காலம் ஊதியமில்லா கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அத்தியாவசியப் பணிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
மற்ற நாடுகள் இடையே பகைமை தூண்டி விட்டு போருக்கு வழி வகுத்து ஆயுத விற்பனை செய்து வந்தது அமெரிக்கா. இதனால் செல்வம் கொழிக்கும் நாடாக, மற்ற நாடுகளை ஆட்டிப்படைத்து வந்தது. தற்போது ரஷ்யாவின் மிரட்டல் காரணமாக அமெரிக்க பயந்துள்ளது. தற்போது நிதி நெருக்கடி வேறு அமெரிக்க அச்சுறுத்தி வருகிறது.